தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காவல் உயர் அதிகாரியுடன் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது : மக்களுக்கு பிரச்னை ஏற்படாத வகையில் முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார்கள் மரணங்களை தடுக்க வேண்டும். பொதுமக்கள் புகார் மீது போலீசார் நடுநிலை தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக வலைதளத்தில் சாதி, மத மோதல்களை தூண்டுபவரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அவர் பேசியுள்ளார்.