விதிகளை மீறினால் சட்ட ரீதியாக பதிலடி தருவோம்…ஆர்.என் ரவிக்கு ஸ்டாலின் கடிதம்

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் ஆர்.என் ரவி அறிந்திருந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதையடுத்து ஆர்.என் ரவி தனது உத்தரவை வாபஸ் வாங்கினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் : தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வரும் நிலையில் அதற்கும் அவரது மீதான வழக்கு தொடர்பான விசாரணையில் எவ்வித பாதிப்பு இருக்காது என தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொறுப்பில் இருந்து புதியதாக ஒருவரை சேர்ப்பதோ அல்லது நீக்கம் செய்வதோ இத்தகைய முடிவுகள் அனைத்தும் முதலமைச்சரின் முடிவுகளுக்கு உட்பட்டது. இதில் வேறு யாரும் உரிமை கொள்வதற்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் இடமில்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக ஆளுநருக்கு முதலமைச்சருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவரது தலைமையின் கீழ் செயல்படும் அமைச்சர்கள் மீது ஆளுநருக்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பல்வேறு வழக்குகள் தீர்ப்புகளை கோடிட்டு காட்டிய தமிழக முதலமைச்சர் செந்தில் பாலாஜி இலக்கா இல்லாத அமைச்சராகவே தொடர்வார் என குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி தொடர்பாக, ஆளுநர் இனி மேலும் விதிகளை மீறி, மரபுகளை மீறி செயல்பட்டால் அதற்கு சட்ட ரீதியாக தகுந்த பதிலடி தரப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி பொறுப்பில் தொடர்வது தொடர்பாக எவ்வித மாற்றமும் இல்லை, என்பதை மறுபடியும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News