Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

2000 ரூபாய் நோட்டு வாபஸ் – கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றை தந்திரம்..ஸ்டாலின் விமர்சனம்

அரசியல்

2000 ரூபாய் நோட்டு வாபஸ் – கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றை தந்திரம்..ஸ்டாலின் விமர்சனம்

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பிறகு புதிய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

இந்நிலையில் நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செப்டம்பர் 30-ம் தேதி முதல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப்பெறும் நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! 2 ஆயிரம் ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை’ என தெரிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top