மழை பாதிப்பின்போது முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இருந்தார்: நிர்மலா சீதாராமன் விமர்சனம்!

தென்மாவட்ட மழை, வெள்ளப் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் தமிழக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“2015 வெள்ளத்துக்கு பிறகு கற்றுக்கொண்ட பாடம் என்ன?. அதிலிருந்து எடுத்த நடவடிக்கைகள் என்ன?. மக்கள் மழை, வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும்போது தமிழக முதல்வர் என்ன செய்துகொண்டிருந்தார். தேசிய பேரிடர் மீட்புப் படையை டெல்லியில் இருந்து நாங்கள் தென்மாவட்டங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த சமயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இருந்தார். தென்மாவட்டங்களில் பேரிடர் ஏற்பட்ட சமயத்தில் முதல்வர் இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்று கொண்டிருந்தார். போகிற போக்கில் 3 நாட்களுக்கு பிறகு பாதிப்புகளை பார்வையிட்டுள்ளார்” என்றார்.

RELATED ARTICLES

Recent News