வாஷிங் மிஷினுக்குள் நுழைந்த விஷம் அதிகம் உள்ள நாகப்பாம்பு..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறம் அனைத்தும் காடுகளால் சூலப்பட்ட ஊராகும். இந்த நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்து வந்த மலையின் காரணமாக விவசாயி பகுதி மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகளிலும் வீட்டை சுற்றி செடி கொடிகளும் பரவலாக வளர்ந்து நிற்கிறது. இதனால் காட்டில் உள்ள விஷ ஜந்துக்கள் ஊருக்குள் நுழைந்து வண்ணமே காணப்படுகிறது.

கடந்த மாதம் மட்டும் இதுவரை வீட்டுக்குள் நுழைந்த தெருவுகளில் நடமாடிய 40-க்கும் மேற்பட்ட விஷ பாம்புகள் பிடித்து மீண்டும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதி காட்டுக்குள் விட்டனர். இந்த நிலையில் ஊத்தங்கரை வித்யா நகரில் ஒரு வீட்டுக்குள் பாம்பு நுழைவதை கண்டு அது சிறந்த குடிப்பு வாசிகள் உடனடியாக தீயணைப்பு துறை நற்கு தகவல் கொடுத்தனர்.

பல மணி நேரம் தேடியும் அந்தப் பாம்பை கண்டுபிடிக்க முடியாத நிலையில் சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த வாஷிங் மிஷினை அப்புறப்படுத்தி வெளியில் கொண்டு வந்து அதை ஒவ்வொரு பகுதியாக கழட்டி தேடினர். கடைசியில் விஷம் அதிகம் உள்ள அந்த நாகப்பாம்பு வாஷிங்மெஷினில் பதுங்கி இருந்தது கண்டெடுத்து பிடிக்கப்பட்டது.

பின்னர் அந்த பாம்பை ஒரு பாலித்தீன் கவரில் அடைத்து மீண்டும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. வீட்டில் இருந்த பாம்பு பிடித்ததன் காரணமாக பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

குடியிருப்பு வாசிகள் அனைவரும் தங்களது வீட்டை சுற்றி செடி கொடி குப்பைகள் அண்டாத அளவிற்கு சுத்தமாக வைத்துக் கொண்டால் மட்டுமே விஷயந்துக்கள் வருவது தவிர்க்க முடியும் என தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

RELATED ARTICLES

Recent News