தளபதி படத்திற்கு உதவி பண்ணும் போலீஸ் கமிஷனர்!

வாரிசு படத்தை முடித்த பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். தளபதி 67 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், விஜய் கேங்ஸ்டராக நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தில் இயக்குநராக பணியாற்றுவதற்கு லோகேஷ் கனகராஜ் அறிய வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது, போதை தடுப்பு விழிப்புணர்வை மையப்படுத்தி 3 முதல் 5 நிமிடங்களுக்குள் குறும்படம் ஒன்றை எடுத்து, 20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இதில், கோவை மாவட்ட மாணவ-மாணவிகள் மட்டும் கலந்துக் கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை, கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் தான் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.