கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் வட மாநில தொழிலார்கள் கையில் உருட்டுக்கட்டையுடன் நுழைந்த வீடியோ காட்சி இணயத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த கல்லூரியில் உள்ள கேண்டினில் தினமும் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உணவருந்தி வருகின்றனர். இந்த கேண்டினில் 15 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று இரவு கேண்டினில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் அங்கிருந்த மாணவர்கள் கேண்டினில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருதரப்பினர் இடையே சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.