கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த கல்லூரி மாணவி வர்ஷினி நேற்று போட்டோ ஷூட்டுக்காக மாலுக்கு செல்ல வேண்டும் என்று தனது பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே மனமுடைந்த வர்ஷினி அவரது அறைக்கு சென்று தாளிட்டு கொண்டார்.
இந்நிலையில் இன்று காலை வர்ஷினி அறைக்கு சென்ற அவரது தாய் அறையில் இருந்த மின்விசிறியில் வர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து வர்ஷினியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போட்டோ ஷூட்டுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.