மெரினாவில் கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணியளவில் கல்லூரி மாணவர்கள் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணத்தினால் கடல் அலையின் சீற்றம் அதிகமாகவே இருந்துள்ளது இதனிடையே போலீசார் கடலை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள விவேகானந்தர் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் 7 மாணவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அங்கு போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பிய நிலையில், இரண்டு மாணவர்கள் மட்டும் போலீசாரின் பேச்சை கேட்காமல் கடல் அலையில் குதித்துள்ளனர்.

அப்பொழுது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் இரண்டு மாணவர்களும் சிக்கி உள்ளனர் அதில் ஆதி என்கிற மாணவனை உடனடியாக போலீசார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் ஆனால் கவியரசன் என்கிற மாணவர் மட்டும் போலீசார் கண்டு பிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.

இதனையடுத்து மெரினா உயிர் பாதுகாப்பு குழு வீரர்கள் உடனடியாக கடலில் குதித்து கவியரசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 5 மணி நேரம் மீட்டு படையினர் தேடிய பிறகு சென்னையை சேர்ந்த கவியரசன் உடலை மீட்டனர் இதனை அடுத்து கவியரசன் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News