கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் ஹோசஹள்ளியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த சுசித்ராவும், அதே கல்லூரியின் முன்னாள் மாணவரான தேஜாஸ் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
ஆனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்காக நேற்று, நகரத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குந்தி பெட்டா மலைக்கு சுசித்ராவை, தேஜாஸ் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றியநிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியால் சுசித்ராவின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தேஜாஸ் தப்பிவிட்டார். உயிருக்கு போராடிய சுசித்ராவை பொதுமக்கள், மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சுசித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், வழக்கு பதிவு செய்து தேஜாஸை இன்று கைது செய்தனர். விசாரணையில் சுசித்ரா பிரிந்து விடலாம் என்று கூறியதாலேயே அவரை கொலை செய்ததாக தேஜாஸ் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் ஹாசன் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.