சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யப்ரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இதற்கு சத்யப்ரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சத்யப்ரியா சதீசுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து சதீஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சதீஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.