சென்னை மெரினா கடற்கரை சாலைக்கு அருகில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மாணவ மாணவியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது மாணவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதேபோல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட மணிப்பூர் பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவர்களை துன்புறுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினார்கள்.