பிரகாஷ் ராஜ் வந்து சென்ற இடத்தை கோமியம் தெளித்து சுத்தம் செய்த கல்லூரி மாணவர்கள்..!!
கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் இருக்கும் எம்.வி. கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டார். கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளாத அந்த நிகழ்ச்சி ஏன் கல்லூரியில் நடக்க வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். மேலும் பிரகாஷ் ராஜ் வருகையை எதிர்த்து போராட்டத்தை நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரகாஷ் ராஜ் வந்து சென்ற இடத்தில் கோமியத்தை தெளித்து மாணவர்கள் சிலர் சுத்தம் செய்தார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசின் நடவடிக்கைகள், பிரதமர் நரேந்திர மோடி குறித்து ட்விட்டரில் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகிறார். இதனால் பாஜகவினரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார்.
அவர்கள் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்களாக தான் இருக்க வேண்டும் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.