கல்லூரி மாணவிகள் சென்ற சுற்றலா பேருந்து விபத்து! – மாணவி பலி!

ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தனர். அதன்படி, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுடன் நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்ட சுற்றுலா பேருந்து 500 மீட்டர் சென்றதும் அங்கிருந்த வளைவு ஒன்றில் திரும்ப முயற்சித்தது.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பேருந்தில் சிக்கிய மாணவிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் ஸ்வேதா என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News