என்னைச் சந்திக்க வருவோர் ஆதார் கொண்டு வாருங்கள் என்று பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேசம் மண்டி நாடாளுமன்ற தொகுதியில் பாலிவுட் நடிகையும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத் தன்னைச் சந்திக்க வரும்போது ஆதார் அட்டையைக் கொண்டு வருமாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தனது அலுவலகத்திற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளியாட்கள் அதிக அளவில் வருவதால், இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்துவதாகவும், தனது தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் தான் சந்திக்க விரும்பவில்லை. தன்னை சந்திக்க வருவோர் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காக, தொகுதி தொடர்பான தேவைகள் மற்றும் சந்திப்பின் நோக்கத்தை ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டு வர வேண்டும்” என்று ரணாவத் கூறினார்.