தமிழகத்தில், இம்மாதம் வணிக சிலிண்டர் விலை, ரூ 61.50 உயர்ந்து ரூ 1,964.50 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.
தமிழகத்தில், வீட்டு சிலிண்டர் கடந்த மாதம், 818.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இம்மாதம், அதன் விலை மாற்றம் செய்யப்படாமல், அதே விலையே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த மாதம் ரூ.1,903 விற்கப்பட்ட வணிக காஸ் சிலிண்டர் விலை, இம்மாதம், ரூ.61.50 உயர்ந்து, ரூ 1,964.50 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.