தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி நகர் ரங்கநாதன் தெருவில் பொது மக்கள் கூடும் இடங்களில் காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் : தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை டீ நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் பெருநகரம் காவல் சார்பாக 18000 காவலர்கள் பணியில் அமர்க்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை காவலர்கள் இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதுவரை எந்த புகார்களும் பதியப்படவில்லை.
தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதை குறித்து நேரங்களை குறித்துள்ளோம். காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுக்களை வெடிக்க வேண்டும் என்று சென்னை பெருநகர மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுகிறேன்.
நீதிமன்ற உத்தரவை அவர்கள் மதிக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் அவர்களது சொந்த பாதுகாப்பை கருதி பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
இந்த விதிகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சீருடை இல்லாத காவல்துறையினர் ஆங்காங்கே முக்கியமான நகை கடைகள் துணிக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் கணித்து வருகிறார்கள். மேலும் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்வதற்காக பணியில் ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.