அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களில், எந்த படம் வெற்றி பெறும் என்று ஒட்டுமொத்த திரையுலகமே காத்துக்கிடக்கிறது. இவ்வாறு இருக்க, துணிவு படத்திற்கும், வாரிசு படத்திற்கும், ஒற்றுமை ஒன்றை நெட்டிசன்கள் கண்டறிந்துள்ளனர்.
அதாவது, அஜித்தின் முந்தைய படமான வலிமை, அம்மா செண்டிமெண்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதேபோன்று, விஜயின் முந்தைய படமான பீஸ்ட், முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஆனால், இவ்விரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இவ்வாறு இருக்க, தற்போது உருவாகி வரும் துணிவு, வாரிசு திரைப்படங்களில், அஜித் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையிலும், விஜய் அம்மா செண்டிமெண்ட் கதையிலும் நடிக்க உள்ளனர். இவர்கள் இருவரும் எடுத்துள்ள இந்த முடிவு, எப்படி வொர்க் அவுட் ஆகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..