நெல்சன் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி. இதையடுத்து LKG, டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
இந்நிலையில்,நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரெடின் கிங்ஸ்லி புதிதாக லெக்பீஸ் என்ற படத்தில் நடிப்பதற்காக 10 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி இருந்தார்.

இதற்காக அவர் முழு சம்பளத்தையும் வாங்கியுள்ளார். ஆனால் 10 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே நடித்து விட்டு மீதமுள்ள நாட்களில் நடிக்க முடியாது என சொல்லிவிட்டாராம். இதனால், தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரெடின் கிங்ஸ்லி திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லது மீதம் இருக்கும் ஆறு நாள் கால்ஷீட்டில் நடித்துக் கொடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுளது.