பிரதமர் மோடி மீது தேர்தல் விதி மீறல் புகார்

கோவையில் நேற்று பாஜக சாா்பில் நடைபெற்ற வாகனப் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த வாகனப் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களும் பங்கேற்றுள்ள்னர்.

இந்த வாகனப் பேரணி கோவை சாய்பாபா காலனியில் இருந்து தொடங்கி, கங்கா மருத்துவமனை, வடகோவை, சிந்தாமணி வழியாக சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று இறுதியாக ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில் வாகனப் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்திய செயல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்றும், எனவே பாஜகவினர் மற்றும் பிரதமர் மோடியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய கம்யூ. சார்பில் தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News