Connect with us

Raj News Tamil

பாஜக வேட்பாளரின் வேட்புமனு.. நிராகரிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார்!

இந்தியா

பாஜக வேட்பாளரின் வேட்புமனு.. நிராகரிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார்!

இந்தியாவின் பிரம்மாண்ட ஜனநாயக திருவிழா என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற தேர்தல், 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்த தேர்தல், 7-வது கட்டமாக வரும் ஜூன் 1-ஆம் தேதி அன்று, முடிய உள்ளது. மேலும், ஜூன் 4-ஆம் தேதி அன்று, தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் தொகுதியின் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர், கடந்த வியாழக் கிழமை அன்று, வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார்.

அப்போது, பிரமாணப் பத்திரத்தில், தனது அசையும் சொத்துக்கள் எவ்வளவு என்றும், அசையா சொத்துக்கள் எவ்வளவு என்றும், அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

அப்போது, மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெரோமிக் ஜார்ஜிடம், உச்சநீதிமன்ற நீதிபதி அவனி பேன்ஸல், புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், “ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்ட சொத்து மதிப்பில் உண்மை இல்லை. எனவே அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் ” என்று கூறப்பட்டுள்ளது. மேலும்,

“இதேபோல், 2022-ஆம் ஆண்டு புகார் அளித்தபோது, உங்களது புகார் நிதியமைச்சகத்துக்கு அனுப்பபட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம், என்னிடம் கூறியிருந்தது. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய பாஜகவினர், “இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்ட புகார். அடிப்படை ஆதாரம் இல்லாமல், பாஜக வேட்பாளருக்கு எதிராக சித்தரிக்கப்பட்ட கதையை காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறது என்பது, இதன்மூலம் தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளனர்.

More in இந்தியா

To Top