சீமானை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் புகார்..என்ன நடந்தது?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தலைவர்கள் பலரும் தங்கள் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அருந்ததியினர் கூட்டமைப்பு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தலித் அமைப்பினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

சீமான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். சீமான் மீது நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்து பிரச்சாரத்திற்கு வரும்போது அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News