அரியலூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள், புத்தாண்டு தினமான இன்றைய தினத்தை கருப்பு தினமாக கடைபிடிப்பதாக அறிவித்துள்ளனர்.
மேலும் இராணுவத்தில் பணியாற்றி உடல் உறுப்புகளை இழந்து பணியாற்ற இயலாத சூழ்நிலையில், பணியில் இருந்து வெளியில் வருபவர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளை குறைத்து வரும் மத்திய அரசை கண்டித்தும், ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தபட்டது. மேலும் (MSP) எனும் மிலிட்டரி சர்வீஸ் பே, அனைத்து பதவியினருக்கும் சமமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தபட்டது.
இதனையொட்டி இந்த புத்தாண்டு நாளை கருப்பு தினமாக அனுசரிப்பதாகவும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வருபவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.