Connect with us

Raj News Tamil

திமுக அரசை கண்டித்து: அதிமுகவினர் உண்ணாவிரதம் போராட்டம்!

தமிழகம்

திமுக அரசை கண்டித்து: அதிமுகவினர் உண்ணாவிரதம் போராட்டம்!

கள்ளச்சாராயம் சாராய மரணம் தொடர்பாக திமுக அரசைக் கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக வழக்கில் சிபிஐக்கு மாற்றவும் சட்டப்பேரவையில் விவாதிக்கவும் அதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தனர்.

இதையடுத்து தொடர்ந்து நான்கு நாட்கள் சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமலியில் ஈடுபட்டு வந்ததால் கூட்டத்தொடர் முடியும் வரை சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிமுகவினர் பங்கேற்கக் கூடாது என சபாநாயகர் அப்பாவு தடை விதித்தார்.

இதனைக் கண்டிக்கும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 64 சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் என அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top