மணிப்பூர் சம்பவம் : மனித நேய மக்கள் கட்சி வைத்துள்ள பேனரால் சர்ச்சை

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இனக்கலவரம் வெடித்தது. மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மணிப்பூர் பெண்கள் விவகாரத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என அந்த பேனருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News