புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மூன்று முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.
இருப்பினும், சட்டரீதியாக அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொள்ளப் போவதாக அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ள நிலையில் இன்று காலை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தவுள்ளாதாக செய்திகள் வருவதாக டெல்லி அமைச்சர் அதிஷி நள்ளிரவில் தகவலை பகிர்ந்துள்ளார்.
மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனையை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் எனவும் டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.