புதுச்சேரி மக்களவைத் தொகுதி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இவர் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் அவர் காலையில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது திடீரென்று வைத்திலிங்கம் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கிப் பிடித்தனர். இதையடுத்து டாக்டர் அங்கு வரவழைக்கப்பட்டு பரிசோதித்தனர். 73 வயதான வைத்திலிங்கத்துக்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் தெரிவித்தார்.
சிறிது ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் ஜீப்பில் ஏறி வாக்கு சேகரிப்பைத் தொடங்கினார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.