கே.எஸ் அழகிரி வந்தால் வெடிகுண்டு வெடிக்கும் – காங்கிரஸ் நிர்வாகி மிரட்டல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கடந்த 2019 ஆம் ஆண்டு கே எஸ் அழகிரி பொறுப்பேற்றார். அதன் பிறகு 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பல இடங்களில் வெற்றி பெற்றது.

கே எஸ் அழகிரி 4 ஆண்டுகளுக்கு மேலாக தலைவர் பொறுப்பில் இருப்பதால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கட்சியின் மூத்த நிர்வாகிகளால் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கே எஸ் அழகிரி திருநெல்வேலி சென்றுள்ளார்.

இந்நிலையில் கே எஸ் அழகிரி வரும்போது வெடிகுண்டு வெடிக்கும் என நாங்குநேரி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அன்பு ரோஸ் என்பவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு அக்கட்சி நிர்வாகியே மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News