“ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறைக்கு காங்கிரஸ் எதிராக உள்ளது: ப.சிதம்பரம்!

‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு காங்கிரஸ் எதிராக உள்ளது என்று முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

கார்கே தலைமையில் முதன்முறையாக கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஓட்டலில் நேற்று தொடங்கியது.

கூட்டத்தில் முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு காங்கிரஸ் எதிராக உள்ளது. அதனை காங்கிரஸ் ஒருபோதும் ஆதரிக்காது. இதனை அமல்படுத்தினால், மாநில அரசுகளின் உரிமைகளை ஒடுக்குவது போலாகிவிடும். இதனை அமல் படுத்த வேண்டுமானால், மத்தியஅரசுக்கு போதிய பலம் தேவை. அது அவர்களிடம் இல்லை. ஆதலால் இச்சட்டம் நிறை வேறாது’’ என்றார்.

RELATED ARTICLES

Recent News