குமரி அனந்தன் மறைவு.. தலைவர்கள் அஞ்சலி..

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குமரி அனந்தன். 93 வயதுடைய இவர், வயது மூப்பு காரணமாக, குடியாத்தம் பகுதியில் உள்ள இயற்கை மருத்துவமனை ஒன்றில், சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த வாரம் இவரது உடல்நலம் மோசமானதையடுத்து, பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி, அவர் நேற்று இரவு காலமானார்.

தற்போது, சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள அவரது மகள் தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்தில், உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நண்பர்கள், உறவினர்கள், குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News