கர்நாடக தேர்தல் – ஆரம்பமே முன்னிலையில் உள்ள காங்கிரஸ்.. பாஜகவின் நிலை என்ன?

கர்நாடகாவில் கடந்த 10-ஆம் தேதி அன்று, சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 224 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ம.ஜ.த உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல், வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், பாஜக 56 இடங்களிலும், காங்கிரஸ் 69 இடங்களிலும், ம.ஜ.த 17 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.

அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருப்பது, அக்கட்சியினருக்கு உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News