கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து, சட்டமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த 10-ஆம் தேதி அன்று தேர்தல் நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ம.ஜ.த, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போட்டியிட்டனர். இந்நிலையில், இந்த தேர்தலின் முடிவுகள், தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
ஆரம்பம் முதலே அதிரடி காட்டும் காங்கிரஸ் கட்சி, 119 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. வெறும் 78 இடங்களில் மட்டும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. ம.ஜ.த கட்சி 24 இடங்களிலும், மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
சென்ற முறை நடந்த தேர்தலில், ஒட்டுமொத்தமாக 104 இடங்களில் பாஜகவும், 80 இடங்களில் காங்கிரஸ்-ம் வெற்றி பெற்றன. வரும் முடிவுகளை பார்க்கும்போது, சென்ற முறை கிடைத்த இடங்களை காட்டிலும் மிக மிக குறைவான அளவே பாஜக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.