அரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிரண் சவுத்ரி மற்றும் அவரது மகள் ஸ்ருதி சவுத்ரி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் இன்று பா.ஜ.க மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
அரியானா பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
கிரண் சவுத்ரி அரியானா முன்னாள் முதலமைச்சர் பன்சி லாலின் மருமகள் ஆவார். மேலும் இவர் பிவானி மாவட்டத்தில் உள்ள தோஷம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். அதேபோல ஸ்ருதி சவுத்ரி அரியானா காங்கிரஸ் செயல் தலைவராக இருந்தவர்.
முன்னதாக, கிரண் மற்றும் ஸ்ருதி இருவரும் நேற்று காங்கிரசின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர்.