காங்கிரஸ் எம்.பி.க்கள், தலைவர்கள் இன்று இரவு அமைதி பேரணி..!

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் அமளி, நாடாளுமன்ற வளாக பகுதியில் ஆர்ப்பாட்டம், கருப்பு தினம் கடைப்பிடிப்பது என தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் இன்று இரவு 7 மணியளவில் செங்கோட்டையில் இருந்து டவுன் ஹால் வரை அமைதி பேரணி ஒன்றை நடத்த உள்ளனர்.

ஜெய் பாரத் சத்யாகிரஹம் என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.