விவேகானந்தர் பாறையில் பிரதமர் தியானம்.. தேர்தல் நடத்தை விதிமீறலா? பொங்கியெழும் காங்கிரஸ்!

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று தொடங்கிய இந்திய நாடாளுமன்ற தேர்தல், வரும் 1-ஆம் தேதி அன்று முடிய உள்ளது. இந்த 7 கட்ட தேர்தல்களுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிய உள்ளது.

அனைத்து மாநிலங்களிலும், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, கடந்த 28-ஆம் தேதி அன்று, அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில், 30-ஆம் தேதி மாலை முதல் 1-ஆம் தேதி மாலை வரை, தியானம் செய்ய உள்ளேன் என்று கூறியிருந்தார்.

இவரது இந்த அறிவிப்புக்கு பின்னால் இருக்கும் காரணம் குறித்து, பாஜகவினர் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர். அதில் சிலர், “தியான் மண்டபத்தில் தான் பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ள உள்ளார். அங்கு தான், பாரத மாதாவின் தெய்வீக தரிசனத்தை விவேகானந்தர் பெற்றதாக நம்பப்படுகிறது. அதனால் தான் பிரதமர் தியானம் மேற்கொள்கிறார்” என்று கூறி வந்தனர்.

என்ன இருந்தாலும், பிரதமர் மோடியின் இந்த செயல்பாடு குறித்து, காங்கிரஸ் கட்சி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், இதுதொடர்பான செய்தியை, மீடியாக்களில் வெளியிடாமல் இருப்பதை, தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் முறையிட்டுள்ளது.

மேலும், கடந்த சில நாட்களாக, தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாஜக மீறி வருவது குறித்தும், மோடி தியானம் குறித்தும், குறிப்பாணை ஒன்றை, காங்கிரஸ் கட்சியின் தூதுக்குழு சமர்ப்பித்துள்ளது.

அந்த குறிப்பாணையில், “தற்போது சொல்லப்பட்டுள்ள மோடியின் பயணம் பெரிய அளவில், ஒளிபரப்பு செய்யப்படும். எனவே, பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும், வாரனாசி தொகுதியில், 48 மணி நேர சைலண்ட் பீரியட் சமயத்தில், இது காட்டப்படும்” , “எனவே, இந்த தியான பயணத்தின் மூலமாக, 48 மணி நேர சைலன்ஸ் பீரியடை, தந்திரமாக வெல்ல பிரதமர் மோடி முயற்சி செய்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

“பிரதமர் மோடி 24-ல் இருந்து 48 மணி நேரத்திற்கு பிறகு தனது தியானத்தை தொடங்கப்பட்டும். மற்றப்படி, ஜூன் 30-ல் இருந்து இவர் தியானம் செய்ய விரும்பினால், இது தொடர்பான செய்தி டிவி மற்றும் அச்சு ஊடகத்தில் வெளியாகமல் இருப்பதை, தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்” என்று தூதுக்குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News