காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவு: 96 சதவீதம் வாக்குகள் பதிவு!

நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல், நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 96 சதவீதம் பேர், இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜூன கார்கேவும், சசிதரூரும் களம் இறங்கியதால், தேர்தல் நடத்தப்பட்டது. டெல்லியில் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் தங்களது வாக்கினை செலுத்தினர்.

கர்நாடகா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி, பெல்லாரி மாவட்டத்தில், நடை பயண வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்த, வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அவருடன் பயணத்தில் இருக்கும் 40 பேர், இதே வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு செய்தனர்.