தொகுதி பங்கீடு: திமுக – விசிக இடையே தொடர் இழுபறி!

திமுக – விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயான தொகுதி பங்கீடு குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென நடைபெறவில்லை.

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரும் டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்டிருந்த திமுக தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தை குழுவினர் அறிவாலயத்தில் காத்திருந்தனர்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் அசோக் நகரில் நடைபெற்று வந்தது.

அந்த கூட்டத்திற்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியை நிர்வாகிகள் அண்ணா அறிவாலயம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென 12:10 மணிக்கு திமுக பேச்சுவார்த்தை குழுவினர் அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

இதனால் திமுக விடுதலை சிறுத்தைகள் இடையேயான பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுந்திருக்கிறது.

ஏற்கனவே மதிமுக தரப்பில் திமுகவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முன் தாயகத்தில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இனையடுத்துடந்த பேச்சுவார்த்தையிலும் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவது என்பதில் உறுதியாக இருந்தது.

இந்தநிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடனான உயர்மட்டக்குழு கூட்டம் அசோக் நகரில் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே விசிக தரப்பில் இரண்டு தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதிகளில் உறுதியாக இருப்பதால் இந்த பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாது இழுபறி ஏற்பட்டு வருவதாக கருதப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News