Connect with us

Raj News Tamil

தொடர் விடுமுறை: மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு!

தமிழகம்

தொடர் விடுமுறை: மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு!

தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, இன்றும் (அக்.20), நாளையும் (அக்.21) கூடுதலாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆயுத பூஜை (அக்.23), சரஸ்வதி பூஜை (அக்.24) என தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, வரும் வெள்ளிக்கிழமை (அக்.20), சனிக்கிழமை (அக்.21) ஆகிய நாட்களில் இரவு 8 மணி முதல் இரவு 10 மணிவரை கூடுதல் சேவை வழங்கப்பட உள்ளது.

அதாவது, இரவு 8 மணி முதல் 10 மணிவரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டுவழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்குபதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும்சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top