சாதாரண TV-யை SONY டிவியாக மாற்றி விற்பனை..! வௌியான அதிா்ச்சி தகவல்..!

தெலுங்கானா மாநிலம் விகாரபத் மாவட்டத்தில் உள்ள பூலமுடி அருகே போலீசார் வழக்கம் போல் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், ஒரு வேன், ஏழு ஸ்கூட்டர் ஆகியவற்றில் சிலர் ஆண்ட்ராய்டு டிவிகளை கொண்டு செல்வதை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்கள் கொண்டு சென்ற டிவிகளை ஆய்வு செய்தனர்.அந்த சோதனையில்,பிரபல தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் பெயரில் ஏராளமான ஸ்டிக்கர்கள் அவர்களிடம் இருப்பது தெரிய வந்தது.

எனவே அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனா்.அப்போது டெல்லியில் குறைந்த விலைக்கு சாதாரண ஆண்ட்ராய்டு டிவிகளை வாங்கி தொழில் நுட்பம் மூலம் 10 நிமிடத்தில் ஒவ்வொரு டிவியையும் அவர்கள் பிரபல நிறுவனம் ஒன்று தயாரித்த டிவிகள் போல் தோன்றும் வகையில் சாப்ட்வேரில் மாற்றம் செய்வதை போலீசார் அறிந்து கொண்டனர்.

டில்லியை சேர்ந்த பவன் சர்மா, சலீம் ஆகியோர் தங்கள் நண்பர்களை கூட்டாளிகளாக சேர்த்துக்கொண்டு பிரபல நிறுவனங்களின் பெயர்களில் போலி டிவிகளை தயார் செய்து தமிழ்நாடு,ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஏராளமான எண்ணிக்கையில் விற்பனை செய்திருப்பதும் தெலுங்கானாவில் செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனடிப்படையில் பவன் சர்மா, சலீம் ஆகியோர் உட்பட ஒன்பது பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 71 ஆண்ட்ராய்டு டிவிகள், ஒரு கார், ஒரு வேன், ஏழு ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர்.
தப்பி ஓடி தலை மறைவாக இருக்கும்
இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News