Connect with us

Raj News Tamil

அநாகரீக செயல்.. கடுப்பான பெண் தொகுப்பாளர்.. அத்துமீறிய கூல் சுரேஷ்.. மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்..

சினிமா

அநாகரீக செயல்.. கடுப்பான பெண் தொகுப்பாளர்.. அத்துமீறிய கூல் சுரேஷ்.. மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்..

நடிகர் மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் சரக்கு. ஜெயக்குமார் ஜே என்பவர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், வலினா பிரின்ஸ், நாஞ்சில் சம்பத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் கூல் சுரேஷ் கலந்துக் கொண்டு, உரையாற்றினார். அப்போது, திடீரென அங்கிருந்து நிகழ்ச்சி தொகுப்பாளரின் மீது, கூல் சுரேஷ் மாலையிட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கிருந்த செய்தியாளர்கள், கூல் சுரேஷ்-க்கு கண்டனம் தெரிவித்தனர்.

பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துக் கொள்கிறீர்களே என்று கேள்வியும் எழுப்பினர். இதையடுத்து, மேடையில் பேச வந்த மன்சூர் அலிகான், கூல் சுரேஷ் சார்பில் மன்னிப்பு கேட்டார்.

பின்னர், கூல் சுரேஷ்-ம் அங்கு வந்து, பகிரங்க மன்னிப்பு கேட்பதாக கூறினார். இந்த சம்பவம், இணையத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top