கூல் சுரேஷிற்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்?

சிம்பு, தனுஷ், சந்தானம் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் நடித்து வந்தவர் கூல் சுரேஷ். இருப்பினும், பெரும் பிரபலம் அடையாத இவர், வெந்து தணிந்தது காடு.. சிம்பு-க்கு வணக்கத்த போடு என்ற வசனத்தின் மூலம், பட்டித் தொட்டியெங்கும், பிரபலம் அடைந்தார்.

பல்வேறு படங்களுக்கு Review கொடுத்து, Youtuber-கள் மத்தியில் சூப்பர் ஹீரோவாக இருந்த கூல் சுரேஷிற்கு, தற்போது பெரிய ஜாக்பாட் ஒன்று அடித்துள்ளது.

அதாவது, கூல் சுரேஷ் மூன்று கெட்டப்புகளில் இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. ‘STR’ என்ற டைட்டிலுடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில், அவர் மூன்றுவிதமான கெட்டப்புகளில் இருக்கிறார்.

கூல் சுரேஷ் நடிக்கும் திரைப்படத்தின் போஸ்டராக இது இருக்கலாம் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர். சிம்புவிற்கு சாதகமாக பேசியே, படவாய்ப்பை இவர் பெற்றுவிட்டார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாக பரவி வருகிறது. இன்னும் சிலர், இது போட்டோஷூட்டாக கூட இருக்கலாம் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்