மஞ்சள் வீரன் படத்தின் புதிய ஹீரோ யார்?

செந்தில் செல்-அம் என்பவர் இயக்கத்தில், Youtube பிரபலம் TTF வாசன் நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் மஞ்சள் வீரன்.

ஆனால், இந்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியானதோடு, எந்தவொரு அப்டேட்டும், படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இருந்து, டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டதாக, படத்தின் இயக்குநர் செல்-அம் சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும், புதிய ஹீரோ யார் என்பது, அக்டோபர் 15-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் கூல் சுரேஷ், பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், சமீபகாலங்களாக நீங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் உள்ளீர்களே. ஹீரோவாக மாறிவிட்டீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், ஆம் ஹீரோவாக மாறிவிட்டேன். மஞ்சள் வீரன் படத்தில் தான் நான் ஹீரோவாக நடிக்க உள்ளேன். அக்டோபர் 15-ஆம் தேதி அன்று புதிய ஹீரோவை அறிவிப்பேன் என்று இயக்குநர் கூறியிருந்தார்.

ஆனால், பத்திரிகையாளர்கள் மீது இருந்த மரியாதையின் காரணமாக, இப்போதே நான் அறிவித்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News