லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் சாகிர், நாகர்ஜூனா உள்ளிட்டோர், முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
வரும் ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி அல்லது தீபாவளி பண்டிகை அன்று, இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி, கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும், முடிவடைந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை, படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.