கூட்டுறவுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பயணித்த கார் விபத்து..!

சென்னை பட்டினப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பகுதி சேதமான நிலையில் நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார்.

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 26) காலை சென்னை பட்டினப்பாக்கத்தில் மீனவ குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்துவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சுற்றுலா வாகனம் தவறுதலாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ராதாகிருஷ்ணன் பயணித்து வந்த காரின் முன் பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. உடனடியாக காரிலிருந்து இறங்கிய ராதாகிருஷ்ணன், தனது காரையும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும் தனது மொபைலில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு பட்டினப்பாக்கத்தில் சுனாமி நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டார்.

RELATED ARTICLES

Recent News