துப்பாக்கியை வைத்து ரீல்ஸ்.. இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்.. பறிபோன வேலை..

காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், மிகவும் ஒழுக்கத்துடனும், கன்னியத்துடனும் இருக்க வேண்டும் என்பது, அந்த துறையின் முக்கிய விதிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த விதிகளை மீறும், காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதும், சில சமயங்களில் பணியில் இருந்தே நீக்கப்படுவதும், அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா மிஸ்ரா.

24 வயதாகும் இவர், காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் காவல்துறை உடையை அணிந்துக் கொண்டு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரீல்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டிருந்தார்.

அந்த ரீல்ஸில், காவல்துறையில் கொடுக்கப்படும் துப்பாக்கியையும், அவர் பயன்படுத்தியிருந்தார். இந்த சம்பவம், இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ, காவல்துறை ஆணையர் கவனத்திற்கு சென்றதையடுத்து, பிரியங்கா மிஸ்ரா, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ததற்காக, கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று, பிரியங்கா மிஸ்ரா, பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த தவறை மீண்டும் செய்ததால் தான், தற்போது அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News