கேரளா மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் இலவம்திட்டா போலீஸ் நிலையத்தில் கோழிக்கறி குழம்பு, மரவள்ளிக்கிழங்கு களி போன்றவற்றை போலீசார் சீருடையில் சமைத்து சாப்பிட்டனர் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் போலீஸ்காரர் கடைக்கு சென்று கோழி இறைச்சி வாங்கியது, வெங்காயம் வெட்டியது, பூண்டு உரிப்பது, சமைப்பது, மேலும் சமைத்த சாப்பாட்டை அதிகாரிகளுக்கு பரிமாறி கொண்டதும், ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டதும் வீடியோவில் இடம் பெற்றிருந்தது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. சிலர் வீடியோவை பார்த்துவிட்டு போலீசாரை பாராட்டியும் வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு தெற்கு மண்டல ஐஜி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.