வேகமெடுக்கும் கொரோனா…தமிழ்நாட்டில் பாதிப்பு எப்படி இருக்கிறது?

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக மார்ச் 23 அன்று, கோவிட் தொற்று எண்ணிக்கை இன்னுமும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் மெல்ல மெல்ல கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் 34 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருந்து வந்த நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் 480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் 83 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி புதன்கிழமை உயர்மட்டக் கூட்டத்தை அழைத்தார், மேலும் கோவிட் -19 இன்னும் முடிவடையவில்லை என்று கூறினார்.

RELATED ARTICLES

Recent News