Connect with us

Raj News Tamil

மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா: ஒரே நாளில் 5 பேர் பலி!

இந்தியா

மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா: ஒரே நாளில் 5 பேர் பலி!

இந்தியாவில் நேற்று (டிச.18) புதிதாக 335 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறையில் அறிக்கையில் கூறியப்பதாவது: உயிரிழந்தவர்களில் 4 பேர் சமீபத்தில் ஜேஎன்.1 புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்ட கேரளாவிலும், ஒருவர் மத்தியப் பிரதேசத்திலும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பு 4.50 கோடியாக (4,50,04,816) உள்ளது. பாதிப்பில் இருந்து இதுவரை 4.46 கோடி பேர் (4,44,69,799) குணமாகியுள்ளனர். தேசிய அளவில் குணமடைந்தவர்களின் சதவீதம் 98.81 ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 5,33,316 உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் 1.19% ஆக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

More in இந்தியா

To Top