Connect with us

Raj News Tamil

“பணத்தை தரும் ஏ.டி.எம் மெஷினாக மாநிலத்தை மாற்றிய காங்கிரஸ்”

இந்தியா

“பணத்தை தரும் ஏ.டி.எம் மெஷினாக மாநிலத்தை மாற்றிய காங்கிரஸ்”

கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான வீடுகளில் இருந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் மூலமாக, 42 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம், கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“காங்கிரஸ் கட்சியினர் வாக்குறுதிகள் கொடுப்பதில் வல்லவர்கள். தற்போது, இந்த கட்சி ஒரு படி மேலே சென்றுள்ளது. சில கர்நாடக ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் இருந்து 100 கோடி ரூபாய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், ஓட்டுபோட்டு காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுத்த மக்களுக்கு, அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி செய்த ஊழல்களின் சிறிய Sample தான் இது.

காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏ-விலேயே ஊழல் உள்ளது. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான், ஊழலும், காங்கிரஸ்-ம்.

இந்த காங்கிரஸ் கட்சியின் ஆதரவு ஒப்பந்ததாரர்கள், கர்நாடகாவின் சட்டமன்ற தேர்தலின்போது, பாஜகவிற்கு எதிராக பொய் சொல்வதில், மிகவும் புத்துணர்ச்சியோடு இருந்தார்கள்.

தற்போது வரவுள்ள தேர்தலுக்காக பணம் திரட்டும் ஏ.டி.எம். மெஷினாக காங்கிரஸ் மாறியிருப்பது, கர்நாடகாவின் கெட்ட காலம்.”

இவ்வாறு கூறியிருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை பிடித்து மக்கள் பணத்தை கொள்ளையடித்ததை போன்று, தெலங்கானா மற்றும் மத்திய பிரதேசத்திலும், மக்கள் பணத்தை கொள்ளையடிக்க காங்கிரஸ் துடிக்கிறது.

ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் ஒதுக்கப்பட்ட பணத்தை கொள்ளையடிக்க காங்கிரஸ் கனவு காண்கிறது. ” என்று தெரிவித்தார்.

மேலும், “காங்கிரஸ் கட்சி, கர்நாடக மாநிலத்தை, ஏ.டி.எம் மெஷினாக மாற்றி உள்ளது என்று நாங்கள் ஏற்கனவே குற்றஞ்சாட்டி இருந்தோம். தற்போது அந்த குற்றச்சாட்டு உண்மையாக மாறியுள்ளது.

முழுமையான உண்மை, தீவிர விசாரணைக்கு பிறகு, வெளியாகும். இதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தில், சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்றும் ஜே.பி.நட்டா பதிவிட்டுள்ளார்.

More in இந்தியா

To Top