சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த கணேஷ் குமார் நேற்று இரவு சொந்த வேலைக்காக சென்னை புழல் விநாயகபுரம் பகுதியில் இருந்து புழல் வரை தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது புழல் கதிர்வேடு பகுதியில் இளம் பெண் ஒருவர் லிப்ட் கேட்பது போல் அவரது வாகனத்தை மடக்கி பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய மறைந்திருந்த காதலனும் சேர்ந்து வந்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றுள்ளனர்.
இதனால் பதற்றம் அடைந்த கணேஷ் குமார் அருகில் உள்ள புழல் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்து நடந்தவற்றை விளக்கி கூறினார். இதனை அடுத்து போலீசார் புழல் பகுதியை சேர்ந்த வாணி மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய காதலன் அபினேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இதுபோல் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.
இதை தொடர்ந்து புழல் போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.